கோயிலெத்தனையோ…..
பல்லவி
கோயிலெத்தனையோ உனக்கிருந்த போதும்
தாயேயென் மனக்கோயில் வந்தமர்ந்தவளே
அனுபல்லவி
தேயும் நிலவணிந்த கேசவன் சோதரி
நோயெனும் பவப்பிணி அணுகாமல் காப்பவளே
சரணம்
வாயார உன் நாமம் பலவும் ஓதியே
ஓயாதுனையே நாளும் துதித்தேன்
நீயாகவே வந்தென் உள்ளம் புகுந்தாய்
மாயே மரகதமே சமயபுரம் மாரி
No comments:
Post a Comment