தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)
श्रीकान्तो मातुलो यस्य जननी सर्वमंगला। जनकः शंकरो देवः तम् वन्दे कुंजराननम्॥
Meaning of shloka: The Lord, for whom Lord Vishnu, the husband of Lakshmi is the uncle, whose mother is the all auspicious one, Parvati and whose father is Lord Shiva; I offer salutations to Sri Ganesha, the elephant faced.
மாமாவுக்கு முதல் இடம் கொடுத்துச் சொல்லிவிட்டு, அவருடைய ஸஹோதரியாக, இவருடைய தாயாக இருக்கப்பட்ட அம்பாளைச் சொல்லியிருக்கிறது.
ஜநநீ ஸர்வமங்களா (பிள்ளையாருடைய ) அம்மா, ஜனனி, யார்? ஸர்வ மங்களா. ரூபம், குணம், கார்யம் முதலான ஸர்வமும் பரம மங்களமாக இருக்கப்பட்ட பராசக்திதான் இவருக்கு அம்மா.
அம்பாளை பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கக்கூடிய ச்லோகம் அவளை ஸர்வமங்களா என்று சொல்லித்தான் ஆரம்பிக்கிறது.
ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே |
சரண்யே த்ர்யம்பகே கௌரி நாராயணி நமோஸ்து தே ||
மஹாவிஷ்ணுவின் அநேகம் பெயர்களில் ஸ்ரீகாந்தன் என்றதில் ‘ஸ்ரீ’ என்பதால் ஸகல ஸெளபாக்கியங்களையும் சொன்னதற்கேற்ப அம்பாளின் பல பெயர்களில் ஸர்வ மங்களா என்று சொல்லிவிட்டு, அப்புறம் அப்பாவைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறது. அன்னைக்குப் பிறகே பிதா என்ற நியாயப்படி, அம்பாளை முதலில் சொன்னபின் “ஜநக:சங்கரோ தேவ:” என்று இவருடைய தகப்பனார் யாரென்றால் பரமசிவன் என்பதாகச் சொல்லியிருக்கிறது. பரமேச்வரனுக்கு எத்தனையோ பெயர்களிருந்தும், பரம மங்களமாக ‘ஸ்ரீகாந்தன்’, ஸர்வமங்களா’ என்ற பெயர்களைச் சொன்னாற்போல, இங்கேயும் ‘சங்கரன்’ என்று சொல்லியிருக்கிறது.’சங்கர’ என்றால் நல்லதையே செய்கிறவர், பரம ஸுகத்தை உண்டாக்குபவர் என்று அர்த்தம். ஸ்ரீ, மங்களம், ஸுகம் எல்லாம் தருபவர் விக்நேச்வரர் என்று காண்பிக்கும் வகையில் அவருக்குள்ள மாமா, அம்மா, அப்பாவின் ‘ பெரிய இடத்து’ ஸம்பந்தத்தைச் சொல்வதாக ச்லோகம் இருக்கிறது.
ஸ்ரீ காந்தோ மாதுலோ யஸ்ய ஜநநீ ஸர்வமங்களா |
ஜநக: சங்கரோ தேவ: தம் வந்தே குஞ்ஜராநநம் ||
“தம் குஞ்ஜராநநம் வந்தே” – இப்படிப்பட்ட அந்த யானை முகனை நமஸ்கரிக்கிறேன். Pictures courtesy சி.லக்ஷ்மணன்
சோகம் நீக்கி……
பல்லவி
சோகம் நீக்கி சுகம் தரும் கரிமுகனை
சாகசம் பல புரிந்த ஐங்கரனைத் துதித்தேன்
அனுபல்லவி
ஆகம வேத புராணங்கள் போற்றும்
கோகர்ண கணபதியை மோதகப் பிரியனை
சரணம்
ஶ்ரீகாந்தன் கேசவன் விரும்பும் மருகனை
ஏகாம்ரேச்வரி மங்களாம்பிகை மகனை
நாகம் கழுத்தணிந்த சங்கரன் புதல்வனை
வேகமுடன் வந்தெனைக் காத்தருள வேண்டுமென
No comments:
Post a Comment