தாணுமாலயனை…
பல்லவி
தாணுமாலயனை மனமாரத்துதித்தேன்
மூணுமாகி நிற்கும் அரனரியயனை
அனுபல்லவி
கோணல் பிறையணிந்த சிவனுமவனே
வேணுவை வைத்திருக்கும் கேசவனுமவனே
சரணம்
காணுவோர் மனம் களிக்கச்செய்திடும் கடவுளை
தோணியப்பனும் தாடாளனுமானவனை
வானுறை அமரரும் அமரேந்திரனும்
கானுறை முனிவரும் கரம் பணிந்தேத்தும்
No comments:
Post a Comment