இருக்கின்ற சிறிது காலத்தையும்
ஜபத்தில், இறையுணர்வை
அடையாது......
வேடிக்கை, விநோதங்களில்
பயனற்ற பேச்சில்,
கூடிக் கும்மியடித்தலில்
வீணாக்கி விட்டு.......
ப்ராணன் போகும்
இழுத்துக்கொண்டுள்ள நேரத்தில்
வருந்திக் கதறிப் பயனென்ன ?
தயவளிக்க வேண்டுமன….
பல்லவி
தயவளிக்க வேண்டுமெனக் கேசவனை வேண்டி
துயருடன் கூவி அழைத்தென்ன லாபம்
அனுபல்லவி
வயதான காலத்தில் உடலயற்சியுற்று
இயலாமல் பாயில் நோயுற்றுக் கிடக்கையில்
சரணம்
பயனற்ற பேச்சில் பொழுது போக்கில்
சுய இன்பமான வீண்கேளிக்கைகளில்
நயனிலாத செயல் பல செய்து
வியர்த்தமாய் வாழ் நாளைக் கடத்திய பின்
No comments:
Post a Comment