ஆகாங்க்ஷ்யமாண பலதான விசக்ஷணாயா:
காமாக்ஷி தாவக கடாக்ஷக காமதேனோ: |
ஸம்பர்க ஏவ கதமம்ப விமுக்தபாஶ-
பந்தா: ஸ்புடம் தனுப்ருத: பஶுதாம் த்யஜந்தி ||76||
கடாக்ஷ சதகம்
தாயே காமாக்ஷி! விரும்பிய பலனைத் தருவதில் ஸமார்த்தியமுள்ள உனது கடாக்ஷமாகிற காமதேனுவின் ஸம்பந்தம் ஏற்பட்டவுடனேயே பாசங்களின் கட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களாய் மனிதர்கள் பசுத்தன்மையை தெளிவாக விட்டுவிடுகிறார்கள்.. அதாவது, அம்பிகையின் கடாக்ஷம் கிடைக்கப்பெற்ற மாத்திரத்திலேயே பக்தர்கள் தங்கள் பாசங்களிலிருந்து விடுவிக்கப்பட்டு ஜீவன் முக்தியை அடைந்து விடுகிறார்கள் என்பது தாத்பர்யம்.
आकाङ्क्ष्यमाणफलदानविचक्षणायाः ।
कामाक्षि तावककटाक्षककामधेनोः ।
सम्पर्क एव कथमम्ब विमुक्तपाश-
बन्धाः स्फुटं तनुभृतः पशुतां त्यजन्ति ॥76॥
காமனுக்குதவிய……
பல்லவி
காமனுக்குதவிய காமாக்ஷி தேவியுன்
தாமரைப் பதம் பணிந்தேன் எனக்கருள் புரிவாய்
அனுபல்லவி
தாமரை நாபன் கேசவன் சோதரி
சோமசுந்தரன் மனங்கவரீச்வரி
சரணம்
காம தேனுவாமுன் கடைவிழிப் பார்வையால்
காமாதி அறுபகை பாசங்கள் நீங்கி
பாமரருமுனது பக்த கோடிகளும்
தாமெனுமகந்தை விட்டு மோட்சமடைகிறார்
No comments:
Post a Comment