Wednesday, 15 June 2022

அனைத்தும் நீயே….

 #ஆதிசங்கரர்_அருளிய #புவனேஸ்வரி #துதி !

மனோவ்ருந்திரஸ்து ஸம்ருதிஸ்தே ஸமஸ்தா

ததா வாக்ப்ரவ்ருத்தி ஸ்துதி: ஸ்யான் மஹேசி

சரீரப்ரவ்ருத்தி: ப்ரணாம் க்ரியா ஸ்யாத்

ப்ரஸீத க்ஷமஸ்வ ப்ரபோ ஸந்ததம் மே!

#இத்துதியை_தினமும் #இரவில் #படுக்கப்போகும் #முன் #பாராயணம் #செய்தால் #நாம் #அன்றன்று_அறியாமல் #செய்த_குற்றங்கள் #மன்னிக்கப்படும்.)

அம்மா! நான் நினைக்கும் விஷயங்கள் எல்லாம் உன்னை நினைப்பதாகவே ஆகட்டும். என் வாக்கிலிருந்து எழும் சொற்கள் யாவும் தங்களைக் குறித்துச் செய்யும் துதியாகவே இருக்கட்டும். என் சரீரத்தால் செய்யப்படும் காரியங்கள் எல்லாம் தங்களுக்குச் செய்யப்படும் நமஸ்காரம் ஆகட்டும். தாயே திருவருள் புரிய வேண்டும். எப்போதும் நான் செய்யும் குற்றங்களைப் பொறுத்தருள வேண்டும். 

       

                                                 அனைத்தும் நீயே….

         

                                                            பல்லவி

                                            அனைத்தும் நீயே தாயே புவனேச்வரி

                                            வினைப் பயன்  களைந்தெனை ஆண்டருள்வாயே

                                                         அனுபல்லவி   

                                            முனைப்புடன் துதித்திடுமடியார்க்கருள்பவளே

                                             தனக்குவமையில்லாத கேசவன் சோதரி

                                                             சரணம்

                                            நினைப்பதனைத்தும் நீயாக வேண்டும்

                                            உனைத் துதிக்கும் துதியேயென் சொல்லாக வேண்டும்

                                            அனைத்து செயலுமுனை வணங்கும் செயலாகட்டும்

                                            மனம் வாக்கு உடலனைத்தும் உனை நாட வேண்டும்

                                          

                        

No comments:

Post a Comment