ஹே காமாக்ஷி ! விளையாடல் நிரம்பிய உனது கடாக்ஷ காந்தியானது ஒரு பக்தன் மேல் விழுந்த கணத்திலேயே, (ஒரு க்ஷணகாலத்திற்குள்) அவன் ஊமையாயிருந்தால், நான்முகனைப்போல ஆகிறான்! வெறுக்கத்தக்க ரூபத்தை உடையவன் மன்மதன்போல ஆகிறான். ஏழையாயிருப்பவன் தேவேந்திரனாக ஆகிவிடுகிறான்!
मूको विरिञ्चति परं पुरुषः कुरूपः
कन्दर्पति त्रिदशराजति किम्पचानः ।
कामाक्षि केवलमुपक्रमकाल एव
लीलातरङ्गितकटाक्षरुचः क्षणं ते ॥74॥
ஏலவார்குழலியே…..
பல்லவி
ஏலவார்குழலியே காஞ்சி காமாக்ஷியே
காலடி பணிந்தேன் காத்தருள்வாயே
அனுபல்லவி
ஞாலமுண்ட வாயன் கேசவன் சோதரி
ஆலவாயழகன் ஏகம்பன் நாயகியே
சரணம்
லீலைகள் புரியுமுன் கடைக்கண்ணருளிருந்தால்
கோலமில்லாதவனும் மன்மதன் போலாவான்
ஊமையாயிருப்பவன் நான்முகனாகிடுவான்
பரம ஏழையும் தேவேந்திரனாவான்
No comments:
Post a Comment