ஒன்றாயும் பலவாயும்….
பல்லவி
ஒன்றாயும் பலவாயும் நின்று காட்சி தரும்
குன்றாத புகழ் மேவும் காந்திமதித்தாயே
அனுபல்லவி
அன்றிலையில் துயின்ற கேசவன் சோதரியே
என்றுமந்த பரமசிவனிடம் கொண்ட நாயகியே
சரணம்
வென்றரக்கன் மகிடனை மாய்த்த உமையவளே
நின்று நிலவும் புகழுடைய மலைமகளே
கன்று தாய்ப்பசுவையழைப்பது போலுனையழைத்தேன்
இன்றேயென் மனத்தில் எழுந்தருளவாய் ஈச்வரியே
No comments:
Post a Comment