ஶைலாதிராஜ தனயாம் ஶரதிந்துகோடி பாஸ்வன்
முகாம்புஜாம் கிரீடயுதாம் த்ரிநேத்ராம்
ஶங்கார்யபீதி வரவர்ய கராம் மனோஞ்யாம்
மூகாம்பிகாம் முனிஸுராபயதாம் நமாமி
"பர்வதராஜனான மலையரசனின் மகள். கோடி சரத்கால சந்த்ரனைப் போல் ஒளிரும் தாமரை வதனத்தினைக் கொண்டவள். ஶங்கம், சக்ரம், வரம், அபயம் ஆகியவற்றை ஏந்தினவள். முனிவர்களுக்கும் தேவர்களுக்கும் அபயம் அளிப்பவள். இத்தகைய ஶ்ரீமூகாம்பிகையை நமஸ்கரிப்போம்" - மூகாம்பிகா ஸஹஸ்ரநாம த்யானம், ஸ்காந்த புராணம் கோலாபுர மாஹாத்ம்யம்
நலமருளும்……
பல்லவி
நலமருளும் அன்னை மூகாம்பிகயை
நிலவின் கலையணிந்த தேவியைப்பணிந்தேன்
அனுபல்லவி
சிலைவடிவில் கொல்லூர்த் திருத்தலத்தில் காட்சி தரும்
முலை பருத்தவளை கேசவன் சோதரியை
சரணம்
சங்கும் சக்கரமும் திருக்கரத்திலேந்தி
வரந்தரும் கரமும்பய கரமும் காட்டி
நரர் சுரர் முனிவர்கள் அனைவருக்குமருள் தரும்
பரமேச்வரியை பர்வதகுமாரியை
No comments:
Post a Comment