கை இலங்கு ஆழி சங்கன் கரு முகில் திரு நிறத்தன்
பொய் இலன் மெய்யன்-தன் தாள் அடைவரேல் அடிமை ஆக்கும
செய் அலர் கமலம் ஓங்கு செறி பொழில் தென் திருப்பேர்
பை அரவு-அணையான் நாமம் பரவி நான் உய்ந்த ஆறே
திருவாழியும் சங்கும்……
பல்லவி
திருவாழியும் சங்கும் கையிலேந்தி நிற்கும்
திருமால் கேசவனை மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
திருமகள் கமலவல்லி அருகிருந்து போற்றும்
அருள் தரும் அப்பால ரங்கநாதனை
சரணம்
மெய்ப் பொருளானவனை பொய்மையில்லாதவனை
பையரவணை துயிலும் பாற்கடல்வாசனை
செய்யலர் கமலம் நிறை தென் திருப்பேர்த் தலத்தில்
எழுந்தருளிக் காட்சி தரும் அப்பக் குடத்தானை
No comments:
Post a Comment