அனைத்தும் நீயே……
பல்லவி
அனைத்தும் நீயே ஆதி காமாக்ஷியே
உனைத்துதித்தேனே தேனே எனக்கருள்வாய்
அனுபல்லவி
தினையளவு துதித்தாலும் பனையளவுப் பலன் தரும்
ஆனைக்காவிலுறை அகிலாண்டேச்வரியே
சரணம்
வனதுர்க்கையாய்க் கதிராமங்கலத்துறைபவளே
கனகதுர்க்கையும் நீயே கருமாரியும் நீயே
அனந்தன் மீதுறங்கும் கேசவன் சோதரியே
வினைப் பயன் தொலைந்திட உனையே தினம் பணிந்தேன்
No comments:
Post a Comment