பொம்மையோ…..,
பல்லவி
பொம்மையோ நானுந்தன் கையிலென்னம்மையே
இம்மைக்கும் மறுமைக்கும் எந்தன் துணை நீயன்றோ
அனுபல்லவி
உம்மையே நம்பினேன் உமையே உமைத்துதித்தேன்
எம்மைக் காத்தருள்வாய் கேசவன் சோதரி
சரணம்
மும்மையாயிருப்பவளே அரனயனரி நீயே
அம்மையப்பன் மனம் மகிழ ஒருபாதி தந்தவளே
செம்மையளிப்பவளே உலகாளும் நாயகியே
தம்மைத் துதிப்போர்க்குத் தயவளிக்கும் தாயே
No comments:
Post a Comment