பிறந்த பயனறியேன்…..
பல்லவி
பிறந்த பயனறியேன் நாராயணனே (உனை)
மறந்திடா மனம் வேண்டும் நாராயணனே
அனுபல்லவி
அறம் பொருளின்பமளிப்பவன் நீயே
குறையொன்றுமெனக்கில்லை உனதருளால் கேசவா
சரணம்
பறந்து கருடன் மீதேறி வந்து
விரைந்தெனக்கருள்வாய் நாராயணனே
இறந்த பின்னுமென் நாமமிவ்வுலகில்
சிறந்து விளங்கிட அருள் புரிவாயே
No comments:
Post a Comment