மெய்யன்புடனே….
பல்லவி
மெய்யன்புடனே துதித்தேன் உன்னையே
பொய்யில்லாதவளே காஞ்சி காமாக்ஷியே
அனுபல்லவி
பையத்துயிலும் கேசவன் சோதரியே
அய்யன் பரமசிவன் மனங்கவர் நாயகியே
சரணம்
வையத்திலே கருப்பையில் கிடந்து நான்
நையப்பிறவாமல் இருந்திட வேண்டியே
தையலே உன்னருள் வேண்டினேன் தாயே
கையறுநிலை நானடையாவண்ணம் காக்க
No comments:
Post a Comment