பற்றுக பற்றற்றான் பற்றினை. அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
அனைத்துப் பற்றுகளையும் (ஆசா பாசங்களை) விட்டு விலகிட
எதிலும் பற்றில்லாத இறைவன் திருவடிகளைப் பற்றுவோமாக.
ஆசை ஏதும் இல்லாதவனாகிய இறைவன் மீது ஆசை கொள்க. அவன் மீது ஆசை கொள்வது நம் ஆசைகளை விடுவதற்கே !
பற்றறுத்திடவே……,
பல்லவி
பற்றறுத்திடவே பற்றினேன் உன் பதம்
உற்றார் சுற்றம் முற்றும் துறந்து
அனுபல்லவி
பெற்றம் மேய்த்திடும் கேசவன் சோதரி
புற்றிடம் கொண்டானின் மனங்கவர் காமாக்ஷி
சரணம்
நற்றவ முனிவரும் ஞானியரும் யோகியரும்
கற்றறிந்தோரும் தேவரும் யாவருமுன்
பொற்றாமரைப் பதமே சதமென அறிந்து
உற்ற துணை நீயெனப் பற்றியது போலவே
No comments:
Post a Comment