ஶ்ரீரெங்கநாயகி தாயார்
வஸந்த உற்சவம் ,
முதலாம் திருநாள் , பெரிய பிராட்டியார் ரெங்கநாயகித்தாயார்
முத்து ராஜமுடி, வைரத்தோடு, மாட்டல், பவழ மாலை,
ரத்ன அபயஹஸ்த்தம், அடுக்கு பதக்கம், ரங்கநாதர் பதக்கம்,
காசு மாலை, தங்க ஹாரம், திருமாங்கல்யம், அணிந்து வஸந்த மண்டபத்தில்
திவ்ய தரிசனம். காண கண் கோடி வேண்டும்.
திருவரங்க நாயகியின்….
பல்லவி
திருவரங்க நாயகியின் தரிசனம் கண்டேன்
வசந்த மண்டபத்தில் அழகுடன் கொலுவிருக்கும்
அனுபல்லவி
திருவரங்கநாதன் கேசவன் உடனிருக்க
திருவரங்கம் திருத்தலத்தில் எழிலுடன் விளங்கும்
சரணம்
தங்க ஹாரமும் காசுமாலையும்
அடுக்குப் பதக்கமுடன் பவழமாலையும்
அரங்கன் பதக்கமும் முத்துராஜ முடியும்
வைரத்தோடுடன் மாட்டலுமணிந்த……. (திருரங்கநாயகியின்…)
பவ பயம் போக்கிடும் வரம் தரும் கரமும்
நவரத்தினம் பதித்த அபய கரமும் காட்டி
சுவர்ண மாலையும் மலர் மாலையும் தரித்து
உவகையுடனே கட்சியளித்திடும்……. ( திருவரங்கநாயகியின்….)
No comments:
Post a Comment