कालाम्बुवाहनिवहैः कलहायते ते
कामाक्षि कालिममदेन सदा कटाक्षः ।
चित्रं तथापि नितराममुमेव दृष्ट्वासोत्कण्ठ एव रमते किल नीलकण्ठः ॥71॥
காலாம்புவாஹ நிவஹை: கலஹாயதே தே
காமாக்ஷி காலிம மதேன ஸதா கடாக்ஷ: |
சித்ரம் ததாபி நிதராமமுமேவ த்ருஷ்ட்வா
ஸோத்கண்ட ஏவ ரமதே கில நீலகண்ட: ||71||
கடாக்ஷ சதகம்
ஹே காமாக்ஷி ! உனது கடாக்ஷமானது கருமையாயிருக்கும் தன்மையினால் காளமேகங்களின் கூட்டங்களோடு எப்போதும் சண்டையிடுகிறது.ஆயினும், கருப்புநிறமுள்ள கண்டத்துடன் நீலகண்டன் மட்டும் இதைக்கண்டு எப்போதும் ரஸிக்கிறான்.
காளமேகங்களைக் கண்டு மயில்கள் நர்த்தனம் செய்வதுபோல் , கறுப்பு நிறத்தில் நீருண்ட மேகங்களையும் தோற்கடிக்கும் அம்பாளின் கடாக்ஷத்தைப் பார்த்து நீலகண்டனான பரமசிவன் சந்தோஷமடைகிறாரே என்று கவி ஆச்சரியம் அடைகிறார்!
அருள் தரும்….
பல்லவி
அருள் தரும் காமாக்ஷி காஞ்சிபுரத்தரசி
இருவினைப் பயன் தொலைய உனையே துதித்தேன்
அனுபல்லவி
வருமிடர் களைபவளே கேசவன் சோதரி
திருமகளும் கலைமகளும் நேசிக்கும் மலைமகளே
சரணம்
கருமேக க்கூட்டம் தனை கண்டு சண்டையிடும்
கருவிழிகள் கொண்டவளே கருணை பொழிபவளே
கருநீலகண்டன் பரமசிவன் மனம் மகிழ்ந்துன்
இருவிழியழகைப் பருகக்கண்டு மகிழ்ந்தேன்
No comments:
Post a Comment