மீயச்சூர் வளர்…….
பல்லவி
மீயச்சூர் வளர் ராணி கல்யாணி ( திரு )
தேயும் பிறையணிந்த ஶ்ரீலலிதாம்பிகையே
அனுபல்லவி
தூயவள் நீயே கேசவன் சோதரி
மாயப் பிறப்பறுக்கும் திரிபுரசுந்தரி
சரணம்
பாயும் ஒளி நீயே பாருலகனைத்தும் நீயே
ஆய கலைகள் தரும் கலைமகளும் நீயே
நேயமுடன் செல்வம் தரும் திருமளும் நீயே
தாயே மலைமகளே அகில லோக நாயகியே
No comments:
Post a Comment