ஶ்யாமா தவ த்ரிபுரஸுந்தரி லோசனஸ்ரீ:
காமாக்ஷி கந்தலிதமேதுர தார காந்தி: |
ஜ்யோத்ஸ்னாவதீ ஸ்மிதருசாபி கதம் தனோதி
ஸ்பர்தாமஹோ குவலயைஶ்ச ததா சகோரை: ||35||
- கடாக்ஷ சதகம்.
श्यामा तव त्रिपुरसुन्दरि लोचनश्रीः
कामाक्षि कन्दलितमेदुरतारकान्तिः ।
ज्योत्स्नावती स्मितरुचापि कथं तनोति
स्पर्धामहो कुवलयैश्च तथा चकोरैः ॥35॥
sparkle as the star and your smile provides the moonlight. This being the case how is it that your eyes quarrel with the blue lily which blossoms when the moon rises and the chakora
bird which absorbs moonlight as food
திரிபுரையே! காமாக்ஷி! கருத்ததும், மலர்ந்ததும், மிருதுவானதுமான கருவிழி காந்தியை உடைய உன்னுடைய கடாக்ஷ சோபையானது, அழகு இரவு நட்சத்திரம்போல் ஒளிவிடுகிறது; உனது புன்னகையாம் நிலவு அதோடு கூடியுள்ளது! ஆனாலும், கருநெய்தல் மலருடனும், சகோரப் பக்ஷியோடும் போட்டியிடுகிறதே! என்ன ஆச்சரியம்!! கருமையில் நெய்தல் மலருடனும் விழியழகில் சகோரப் பறவையுடனும் அன்னையின் கடைவிழிகள் போட்டியிடுவதாகக் கவி கற்பனை செய்கிறார். சந்திரன் குவலயங்களை மலரச்செய்வதாலும்,சகோர பக்ஷிகள் நிலவின் கதிர்களை உணவாக கொள்வதாலும் இரண்டுக்கும் நண்பனாயிருந்தும் எதிர்ப்பதாக ஆச்ரியப்படுகிறார்.
திரிபுரசுந்தரியே…..
பல்லவி
திரிபுரசுந்தரியே காமாக்ஷி உனைப் பணிந்தேன்
கரிசனத்துடனெனையே காத்தருள்வாயே
அனுபல்லவி
திரிபுரமெரித்த சிவன் மனங்கவர்ந்தவளே
அரி நாராயணன் கேசவன் சோதரி
சரணம்
கருவிழியிரண்டும் விண்மீன் போல் மின்ன
இருளில் நிலவொளியாயுன் புன்னகை சேர
கருநெய்தல் மலர் மற்றும் சகோரப்பறவையுடன்
இருவிழி போட்டியிட அழகுடன் காட்சி தரும்
No comments:
Post a Comment