திருவடி நிழலே…
பல்லவி
திருவடி நிழலே போதுமய்யா
திருமாலே கேசவா எனக்குன்றன்
அனுபல்லவி
இருவினைப் பயன்களால் படுந்துயர் நீங்கி
மறுபடி பிறவாத நிலையடைந்திடவே
சரணம்
தரும நெறி காக்க தரணியிலுதித்தவனே
பெருமைக்குரிய சென்னை மாநகரில்
திருமகள் செங்கமலவல்லியுடனெழுந்தருளி
அருட்காட்சியளித்திடும் சென்னகேசவனே
No comments:
Post a Comment