இனியவனே…..
பல்லவி
இனியவனே என்று பாடி வந்தேன்
இனி அவன் தான் துணை என்று நாடி நின்றேன்
அனுபல்லவி
கனியொன்று ஈசன் தராததாலே
தனியொருவனாய் சினம் கொண்டு
சரணம்
ஆண்டியாய்க் கோலமுற்று வேலேந்தி
பழனியெனும் குன்றின் மேல் நின்றருளும்
தண்டபாணியைக் கேசவன் மருகனை
தொண்டர்கள் பணிந்தேத்தும் வேல் முருகனை
துரிதம்
பனிமலை நாதன் பார்வதி நான்முகன்
முனிவர்கள் சுகசனகாதியரிந்திரன்
சனியுடன் கோள்கள் நந்தி கணங்கள்
மனிதர்கள் தேவர்கள் வணங்கிடும் குமரனை
No comments:
Post a Comment