அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அன்னை காமாக்ஷி உமையே .........
காலாஞ்ஜனம் ச தவதேவி நிரீக்ஷணம் ச
காமாக்ஷி ஸாம்யஸரணிம் ஸமுபைதி காந்த்யா |
நிஶ்ஶேஷ நேத்ர ஸுலபம் ஜகதீஷு பூர்வ-
மன்யத் த்ரிநேத்ர ஸுலபம் துஹினாத்ரி கன்யே ||36||
- கடாக்ஷ சதகம்.
कालाञ्जनं च तव देवि निरीक्षणं च
कामाक्षि साम्यसरणिं समुपैति कान्त्या ।
निश्शेषनेत्रसुलभं जगतीषु पूर्व-
मन्यत्त्रिनेत्रसुलभं तुहिनाद्रिकन्ये ॥36॥
women beautify their eyes) and the
glances from the corners of your eyes sail in the same boat as both are dark. But the first is easily available to the eyes
of all in this world, but your glances O daughter of Himavan!, is easily
available only to your consort Shiva.
ஹிமவானுடைய பெண்ணாகிய ஹே தேவி! காமாக்ஷி ! கருப்புமையும், உனது பார்வையும் காந்தியால் சமமாயிருக்கின்றன. ஆனால், கருப்புமையானது உலகில் அனைவரது நேத்ரங்களுக்கும் ஸுலபமாய் கிடைக்கக் கூடியது.உனது கடாக்ஷமோ முக்கண்ணனுடைய பரமசிவனுக்கு மட்டும் கிடைக்கக்கூடியதாயிருக்கிறது!
பெருமைக்குரிய……
பல்லவி
பெருமைக்குரிய இமவான் மகளே
கருமுகில் தவழும் நிலவின் பிறையணிந்தவளே |
அனுபல்லவி
திருமகள் நாயகன் கேசவன் சோதரியே
முருகன் கணபதியின் தாயே ஈச்வரியே
சரணம்
கருவிழிக்கழகூட்டும் கரிய மையுனது
இருவிழிக்கழகூட்ட எளிதில் கிடைப்பினுமுன்
அருள் தரும் கருவிழிப் பார்வை மட்டும்
பெருமான் முக்கண்ணன் சிவனுக்கே உரியது
No comments:
Post a Comment