மூன்றாம் பிறையணிந்த…….
பல்லவி
மூன்றாம் பிறையணிந்த சந்திரசேகரனை
சான்றோர் போற்றும் சங்கரனைப் பணிந்தேன்
அனுபல்லவி
தான் தோன்றீச்வரனைக் கேசவன் நேசனை
மான் மழுவேந்திய நமச்சிவாயனை
சரணம்
தேன் மொழியாள் பார்வதியை இடப்புறம் கொண்டவனை
ஊனுயிர் தந்தெனைக் காத்திடும் காமேச்வரனை
தானெனுமகந்தையைப் போக்கிடும் பரமேச்வரனை
கோனாகி கூத்தாட்டுவானாகி நிற்பவனை
வானுறை தேவரும் கானுறை முனிவரும்
பானுவும் சந்திரனும் நந்தியும் கணங்களும்
ஞானியரும் யோகியரும் இந்திரனும் வணங்கிடும்
வான்புகழ் கொண்ட சிவபெருமானை
No comments:
Post a Comment