நாள் தொறும்…..
பல்லவி
நாள் தொறுமுனைத் துதித்தேன் நாராயணனே
மாள்வதும் பிறப்பதுமில்லாத நிலை பெறவே
அனுபல்லவி
தாள் பணிந்திடுமெனையே தயவளித்து
ஆள்வதுன் கடனன்றோ ஆதிகேசவனே
சரணம்
வேள்விகள் புரிந்திடும் சனகாதி முனிவர்களும்
கோள்களுமிந்திரனும் நாரதரும் நான்முகனும்
வாள் வீசும் மன்னர்களும் பணிந்தேத்தும் வண்ணம்
நீள் கழல்கள் காட்டி நின்றருளும் பரம்பொருளே
No comments:
Post a Comment