தந்திமாரியம்மனுன்…….
பல்லவி
தந்திமாரியம்மனுன் தாள் பணிந்தேன்
உன் தயையொன்றே போதுமம்மா
அனுபல்லவி
சந்திர சூரியரைக் கண்களாயுடைவளே
சிந்தைக்கும் மொழிக்குமெட்டாத பராபரையே
சரணம்
மந்திர மேருவில் அமர்ந்திருப்பவளே
நந்தகோபன் மகன் கேசவன் சோதரியே
வெந்தணலேந்தி வரும் பக்தருக்கருள்தரும்
சுந்தரி சுகுமாரி உனதருள் வேண்டியே
No comments:
Post a Comment