திருந்த அம் புவனங்கள் ஈன்ற பொற்பாவை திருமுலைப்பால்
அருந்திச் சரவணப் பூந்தொட்டில் ஏறி அறுவர் கொங்கை
விரும்பிக் கடல் அழக் குன்று அழச் சூர் அழ விம்மி அழுங்
குருந்தைக் குறிஞ்சிக் கிழவன் என்று ஓதும் குவலயமே.
......... பதவுரை .........
அழகிய உலகங்கள் யாவையும் பெற்று அருளிய பொன்னிற உமாதேவியின்
ஞானப் பாலைப் பருகிய பின்னர், சரவணத் தடாகத்தில் உள்ள தாமரை
மலர்த் தொட்டிலில் ஏறி, கார்த்திகைப் பெண்களாகிய ஆறு செவிலியர்
பாலையும் உண்ண விழையவே, கடல் அழவும், கிரௌஞ்சமலை அழவும்,
சூரபன்மன் அழவும், தானும் விம்மிவிம்மி அழுத இளங் குழந்தையை
உலகமானது குரிஞ்சிக் கிழவன் என்று சொல்லும்!
குறிஞ்சிக் கிழவன்….
பல்லவி
குறிஞ்சிக் கிழவனை முருகனைப் பணிந்தேன்
அரியயனரன் போற்றும் முத்துக்குமரனை
அனுபல்லவி
திரிபுரமெரித்த உமாதேவியின்
அரிய ஞானப் பாலினை அருந்திய
சரணம்
சரவணப்பொய்கையில் தாமரைத்தொட்டிலில்
அறுவிதச்செவிலியர் பாலுண்ண விழையவே
பொறுமையின்றியே கடலும் மலையுமழ
சூரனுடன் விம்மி விம்மியழும் குழந்தையை
No comments:
Post a Comment