நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல் ! ஸ்ரீ நரசிம்ஹாய நமஹ !
சத்யம் விதாதும் நிஜப்ருத்ய பாஷிதம்
வ்யாப்தம்ச பூதேஷு அகிலேஷு சாத்மன:
அத்ருஷ்யதாத் அதியத்புத ரூபமுத்வஹன்
ஸ்தம்பே சபாயாம் ந ம்ருகம் ந மானுஷம்… !!!
ஸ்ரீமத் பாகவத்தில் நரசிம்ம அவதாரத்தில் சொல்லப்பட்ட மிகமிக முக்கியமான ஸ்லோகம்.
நாராயணன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்று மிக நம்பிக்கையுடன் சொன்ன தன் பக்தனான பிரகலாதனின் வாக்கை காப்பாற்ற வேண்டி, மிருகமும் அல்லாத மனிதனும் அல்லாத ஒரு உருவத்தில் – நரசிம்மனாக – கம்பத்தில் இருந்து தோன்றினான். மேற்கண்ட ஸ்லோகத்திற்கு இது ஒரு எளிமையான விளக்கம். "ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் "
ஆணழகன் நரசிம்மன்……
பல்லவி
ஆணழகன் நரசிம்மன் திருவடி பணிந்தேன்
காணக் காணத் திகட்டாத வடிவுடைய
அனுபல்லவி
வாணுதலை மடியில் வைத்திருக்கும் கேசவன்
சாணூரனரக்கனை வென்ற மாதவன்
சரணம்
ஆணவத்துடனே இரணியன் கேட்டதற்குத்
தூணிலிமிருப்பான் துரும்பிலிமிருப்பான்
மாணப் பெரியவனவனென்ற சொல் கேட்டு
தூணினைப் பிளந்து ஆளரியாயவதரித்த
No comments:
Post a Comment