தினமுனைப் பாடி…..
பல்லவி
தினமுனைப்பாடித் துதித்திட ஆசைகொண்டேன்
அனைத்தும் நீயென அறிந்தேன் நாராயணா
அனுபல்லவி
மனம் மகிழ மங்கையலமேலு கரம்பிடித்த
வனமாலி கேசவனே திருவேங்கடமுடையோனே
சரணம்
சனகாதி முனிவர்களும் நாரதரும் நான்முகனும்
தினம் பணியும் திருமலை வாசனே கோவிந்தா
வினதையின் புதல்வனை வாகனமாய்க்கொண்டவனே
எனக்கருள வேண்டுமென உன் பாதம் பணிந்து
No comments:
Post a Comment