அஞ்சாதே நெஞ்சமே நீ குமரய்யன் பாதம் தஞ்சமே எந்நாளும் என்றிரு நீ
மஞ்சார் சோலை மலை யுகந்த கந்த ஸ்ரீமான் இருக்க பயமேன் உனக்கே நீ
பன்னிரு நயன க்ரிபாகரன் பாவனி பதித்த பவானி பாலன்
ஸ்வர்ண வேலன் கவி குஞ்சரதாசன் உன்னுள் இருக்க உனக்கேன் கிலேசம் நீ
ராகம் பாவனி ஸ்ரீ கோடீஸ்வரர் ஐயர்
பஞ்சாட்சரன்…..
பல்லவி
பஞ்சாட்சரன் மகனை நெஞ்சாரத் துதிப்பவர்கள்
அஞ்ச வேண்டாமெதற்கும் அவனியிலே
அனுபல்லவி
கஞ்சனைக் காய்ந்த கேசவன் மருகனை
குஞ்சரி மணாளனை குருபரனை குகனை
சரணம்
வெஞ்சமரிலரக்கன் தாரகனைக் கொன்றவனை
அஞ்சுகரம் கொண்ட கணபதி சோதரனை
பஞ்சபாணப் பயிரவி புதல்வனை
தஞ்சமடைந்தோர்க்கு தயவளிக்கும் கந்தனை
No comments:
Post a Comment