நீலி திரிசூலி…..
பல்லவி
நீலி திரிசூலி காளியுனைத் துதித்தேன்
கேலியாயெனைப் பார்த்து சிரிப்பதென்ன
அனுபல்லவி
ஆலிலை துயிலும் கேசவன் சோதரி
நாலு வேதங்களும் போற்றும் பைரவி
சரணம்
காலிகளுடன் சேர்த்து அலைவிட்டாய்
போலி மனிதருடன் எனை உலவ விட்டாய்
சோலி எதுவுமின்றித் திரிய விட்டாய்
பாலித்தருள்வாயென பாதம் பணிந்தேன்
No comments:
Post a Comment