ஆனங்க தந்த்ர விதி தர்ஶித கௌஶலானாம்
ஆனந்த மந்த பரிகூர்ணித மந்தராணாம் |
தாரள்யம் அம்ப தவ தாடித கர்ணஸீம்னாம்
காமாக்ஷி கேலதி கடாக்ஷ நிரீக்ஷணானாம் ||3 கடாக்ஷ சதகம்||
தாயே! காமாக்ஷி! காம சாஸ்திர நியமங்களில் ஸாமர்த்யத்தைக் காட்டுகிறவைகளும், சந்தோஷத்தினால் மெதுவாக சுழன்று கொண்டிருப்பவைகளும், காது வரையில் நீண்டிருப்பவைகளுமான உனது கடைக்கண் பார்வைகளின் காந்தியானது மிகவும் இனிமையாக விளையாடுகிறது.... ஜய ஜய ஜகதம்ப சிவே.....
காமாக்ஷி தாயே…..
பல்லவி
காமாக்ஷி தாயே உன் பதம் பணிந்தேன்
தாமதமின்றியே அருள் புரிவாயே
அனுபல்லவி
பூமிநாதன் காமேச்வரன் நாயகியே
ஆமருவியப்பன் கேசவன் சோதரி
சரணம்
காம சாத்திரக் கலைகளறிந்தவளே
ஆமோதத்துடன் காதுவரை சுழலும்
தாமரையொத்த கண்களின் விழிகள்
பாமரன் என் மீது விழுந்திட வேண்டி
No comments:
Post a Comment