புண்டரீகாக்ஷனை ……
பல்லவி
புண்டரீகாக்ஷனை நாராயணனை
பண்டரி நாதனை மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
அண்டசராசரங்களை அன்னைக்குக் காட்டிய
மண்ணுண்ட வாயனை மாமாயன் கேசவனை
சரணம்
கண்டவர் மனம் களிக்கும் பேரழகுடையவனை
பண்டொருநாள் குன்றுதனைக் குடையாகப் பிடித்தவனை
வண்டமரும் பூங்குழலாள் மார்பிலுறை மாதவனை
தண்மதி முகத்தானைத் தாமரை நாபனை
No comments:
Post a Comment