அனைத்தும் நீயென……
பல்லவி
அனைத்தும் நீயென அறிந்த பின்னாலே
எனக்கொரு குறையுமில்லை நாராயணனே
அனுபல்லவி
அனந்தனின் மீதுறங்கும் திருமாலே வைகுந்தா
மனத்துக்கினியானே மாதவனே கேசவனே
சரணம்
சனகாதி முனிவர்களும் நாரதரும் நான்முகனும்
அனங்கனுமமரரும் அமரேந்திரனும்
தினம் பணிந்தேத்தும் பரவாசுதேவனே
தனக்குவமையில்லாத தனிப்பெருங்கடவுளே
No comments:
Post a Comment