ஶ்ரீமன் நாராயண…..
பல்லவி
ஶ்ரீமன் நாராயண ஶ்ரீமன் நாராயண
ஶ்ரீமன் நாராயணனே உன் பாதமே சரணம்
அனுபல்லவி
தாமரை மலரமர் பிரமனும் ஈசனும்
நாமங்களோதி துதித்திடும் மாதவனே
சரணம்
பூமகளைத் தன் மார்பில் வைத்திருக்கும் கேசவனே
தாமரை நாபனே காமனைப் படைத்தவனே
மாமறைகள் புகழ்ந்தேத்தும் தாமரைக் கண்ணனே
பூமண்டலம் கொண்டாடும் பரவாசுதேவனே
No comments:
Post a Comment