பாடிப்பாடி…..
பல்லவி
பாடிப்பாடி மனமுருகியுனையழைத்தேன்
தேடித் தேடித் திரிந்தேன் நரசிங்கா உன்னையே
அனுபல்லவி
வாடி வாடிக் கண்ணீர் மல்க உனையே
நாடி நாடி ஓடியலைந்தேன் கேசவா
சரணம்
ஓடியோடித்தேடி உனைக் காணாமல்
வாடியிளைத்தேன் வருந்தித் தவித்தேன்
ஈடிணையில்லா கலியுகத் தெய்வமே
வேடிக்கை செய்யாமலெனக்கருள வேண்டினேன்
No comments:
Post a Comment