தேவி…..
பல்லவி
தேவி உன் பாதம் பணிந்தேன்
ஓவியம் போல் வீற்றிருக்குமன்னையே ஶ்ரீமகா
அனுபல்லவி
மாவிடை வாகனன் பங்கிலுறைபவளே
ஆவினங்கள் மேய்க்கும் கேசவன் சோதரி
சரணம்
பூவினைக்கையிலேந்தும் புவி போற்றும் மலைமகளே
தீவினையகற்றி நல்வினை சேர்ப்பவளே
மூவாசைப் பிணி போக்கும் முன்வினைப் பயன் நீக்கும்
காவிய நாயகியே கலங்கரை விளக்கமே
No comments:
Post a Comment