என்ன என்றுனைப்………
பல்லவி
என்னவென்றுனைப் போற்றி நான் பாடுவேன்
பன்னக சயனனே ஶ்ரீமன் நாராயணா
அனுபல்லவி
முன்னவனே மூலப்பொருளே கேசவனே
தன்னிகரில்லாத தனிப்பெருந்தெய்வமே
சரணம்
புன்னை மரத்தடியே குழலூதும் கண்ணனும்
சொன்ன சொல் காக்கும் ஶ்ரீராமனும் நீயே
உன்னருளின்றியோரணுவுமசையுமோ
மன்னு புகழ் திருமலை வாழ் மலையப்பா கோவிந்தா
No comments:
Post a Comment