தனித்தேரமிக்கும் தவத்தாள்அரன்மெய்
அணைத்தாள்அனைத்தும் படைத்தாள்இரங்கும்
குணத்தாள்பவத்தின் நடுக்கம்கெடுத்தென்
மனத்துள்ளுதித்தாள் மலர்த்தாள்சரணமே!
ஏகாந்தையாக (சிவானந்தலஹரியில்) ஆழ்ந்து ரமிக்கின்ற தவம் கொண்டவளும், பரமேச்வரனின் சரீரத்தை அணைத்தவளும், அனைத்து ப்ரபஞ்சங்களையும் படைத்தவளும், (பக்தர்களின் குறை தீர்க்க) தயை புரிபவளும், ஸம்ஸாரத்தின் நடுக்கத்தைத் தீர்த்து எனது மனதினுள் உதித்தவளுமான (என் அன்னையின்) மலரடிகளில் சரணம் புகுந்து விட்டேன்.
தானே தனியே…..
பல்லவி
தானே தனியே ரமிக்கும் தாயின்
தாமரைப்பதம் பணிந்து அருள் வேண்டித் துதித்தேன்
அனுபல்லவி
கூனல் பிறயணிந்த சிவனையணைத்தவளின்
ஆனிரைகள் மேய்த்த கேசவன் சோதரியின்
சரணம்
தேனென இனிக்கும் மொழியுடையாளின
வானும் புவியுமனைத்தும் படைத்தவளின்
தீனருக்கருளும் குணமுடையவளின்
ஞானமளித்தென் பவபயம் களைந்தவளின்
No comments:
Post a Comment