மௌனமே……
பல்லவி
மௌனமே மொழியாக ஞானகுருவைப்பணிந்தேன்
கௌமாரனவனருள் வேண்டுமெனத்துதித்து
அனுபல்லவி
ஔவியம் வஞ்சம் நீங்கி மனமமைதி பெறவே-சுக
சௌனகாதியர் வணங்கும் குமரனை முருகனை
சரணம்
பௌதீக உலகில் அனைத்துமவனை
சௌந்தர்யமானவனைக் கேசவன் மருகனை
ஔதாரியம் தந்து அடியாரைக்காப்பவனை
சௌதாமினி சங்கரி விரும்புமன்பு மகனை
No comments:
Post a Comment