எத்தனையோ….
பல்லவி
எத்தனையோ பாடல்கள் உனைப்போற்றிப் பாடிவிட்டேன்
சித்தமின்னும் இரங்காத தேனோ சிவபெருமானே
அனுபல்லவி
பித்தனென்றும் பேயனென்றுமழைத்ததால் கோவமோ
அத்தனே ஈசனே கேசவன் நேசனே
சரணம்
உத்தமி உமையவளின் பங்கிலுறைபவனே
முத்தமிழ் போற்றும் வித்தகனே விமலா
மெத்தனமாயில்லாமல் குத்தம் குறை காணாமல்
உத்தமனே மனமிரங்கி எனக்கருள் புரிவாய்
No comments:
Post a Comment