வலி பிணி தந்தெனை….
பல்லவி
வலி பிணி தந்தெனை வருத்தினாலும் ஶ்ரீராமா
நலிவுற்ற நிலையிலும் நானுனை மறவேன்
அனுபல்லவி
சலிப்படையாமல் கேசவன் உனையே
அலுப்பின்றித் துதித்தேன் அருள்வாய் நீயென
சரணம்
கலியின் கொடுமையால் படுந்துயர் நீங்கிட
புவிதனிலவதரித்த அயோத்தி மன்னனே
புலியெனப் பாய்ந்து ராவணனை வதைத்தவனே
கலியுக வரதனே கோசலை மைந்தனே
No comments:
Post a Comment