பதுமநாபன்…..
பல்லவி
பதுமநாபன் பதமலர் பணிந்தேன்
சதுர்மறை போற்றும் தேவாதி தேவன் - ( அனந்த)
அனுபல்லவி
மதுர மொழியாள் திருமகளைத் தன் மார்பில்
இதமுடன் தாங்கும் மாதவன் கேசவன்
சரணம்
சதுர் முகனிந்திரன் சுக சனகாதியர்
முதுமுனி வியாசர் நாரதர் நரர் சுரர்
குதுகலத்துடனே கரம் பணிந்தேத்தும்
யதுகுல திலகன் ஶ்ரீமன் நாராயணன்
No comments:
Post a Comment