பாதமே துணை….
பல்லவி
பாதமே துணை சென்ன கேசவா ( உன் ) ( மலர்ப்)
வேதனை வினை தீர இனி பிறவாதிருக்க
அனுபல்லவி
மாதினை மார்பினில் வைத்திருக்கும்
மாதவனே மதுசூதனனே
சரணம்
பூதனையைக் கொன்ற கண்ணபெருமானே
யாதவ குலத்துதித்த ஶ்ரீதரனே
ஓதக் கடல் துயிலும் நாராயணனே
சோதனை செய்யாமலருள் புரிந்திடவே
No comments:
Post a Comment