தேவீ புஜங்க ஸ்தோத்ரம் !
7.சரீரே தநேண்பத்ய வர்கே கலத்ரே விரக்தஸ்ய ஸத்தேசிகாதிஷ்ட புத்தே ஐ யதாகஸ்மிகம் ஜ்யோதிரானந்த ரூபம் ஸமாதௌ பவேத் தத்வமஸ்யம்ப ஸத்யம்
உடல், செல்வம், பெண்டு பிள்ளைகள் ஆகியவற்றில் பற்று வைக்காமல் சீரிய குருவின் ஆணைப்படி செல்பவனுக்கு ஒருவேளை ஸமாதி நிலையில் பேரானந்தப் பேரொளியின் தர்சனம் கிடைக்குமானால், ஹே அம்ப ! அதுவே தத்வஜ்ஞானம் இது உண்மை.
Sareere dhane apathya varge kalathre,
Virakthasya saddhesikadhi ishta budhe,
Yadakasmikam jyithir Ananda roopam,
Samadhou bhaveth thath thwamasyamba sathyam.
He who has developed detachment towards,
Ills that affect the body or wealth and his wife,
And has a wisdom liked by his great teacher,
Sees a glowing light form during his Samadhi,
And mother , it is the truth , that it is you.
शरीरे धनेऽपत्यवर्गे कलत्रे विरक्तस्य सद्देशिकादिष्टबुद्धेः ।
यदाकस्मिकं ज्योतिरानन्दरूपं समाधौ भवेत्तत्त्वमस्यम्ब सत्यम् ॥ ६ ॥
கண்டு கொண்டேன்……..
பல்லவி
கண்டு கொண்டேன் உனை நானே தாயே லலிதாம்பிகையே
அண்டபகிரண்டங்களை உண்டு பண்ணி ஆளுமுனை
அனுபல்லவி
மண்டியிட்டுனைத் துதித்தேன் கேசவன் சோதரி
அண்டிப் பணிந்திடுமெனைக் காத்தருள்வாயே
சரணம்
பெண்டு பிள்ளை வீடு செல்வம் மீது பற்று வைக்காமல்
உண்ணும் உணவெதிலும் அதிக ஆசை கொள்ளாமல்
தொண்டு செய்யும் மனத்துடனே குரு சொல்லும் வழி நடக்கும்
தொண்டன் மனத்துள்ளே தோன்றுகின்றே ஒளியே
No comments:
Post a Comment