சிரஸில் மயில் தோகை! பிறை நெற்றியில் தவழும் குஞ்சலங்கள்!
அழகான நெற்றி ஊர்த்வ திலகம் வளைந்த புருவங்கள்!
தாமரஸ நேத்ரம்! குளிர்ந்த கடாக்ஷம்காதுகளில் குண்டலம்! பருத்த கன்னங்கள்
உன்னத நாசிகை! திவ்யரூப பிம்பம்சுந்தரமந்தஹாஸம்! பவழங்களையொத்த இதழ்கள்!
கழுத்தில் சங்கிலி, புலிநகம்! காசுமாலைகள்!
தேஜோமயமான வைடூரியங்கள்! கைகளில் கங்கணங்கள்!
விரல்களில் ரத்தின மோதிரங்கள்! இடுப்பில் தங்க அரைஞாண். இரத்தின வஸ்திரங்கள்! பட்டுபீதாம்பரம்! பாதங்களில் தண்டை கொலுசு ஜல்ஜல் என்ற சப்தம் கொடுக்கிறது
நீலமேகச்யாமளன்! மனதைக்கவரக்கூடிய திவ்ய ரூபம்.
நீலமேக வண்ணனை…
பல்லவி
நீலமேக வண்ணனை மனம் மயக்கும் கண்ணனை
ஆலிலை துயின்றவனைக் கண்ணாரக் கண்டேன்
அனுபல்லவி
ஞாலமுண்ட வாயனை கம்சனின் காலனை
கோலக் குழலாள் ராதையின் நாயகனை
சரணம்
பிறைநுதலில் அழகுத் திலகமணிந்து
கொண்டையில் மயில் தோகை காற்றிலசைந்தாட
குண்டலமிரண்டும் காதுகளிலாட
வெண்ணையுண்ட வாயினால் பருத்த கன்னங்களுடன்
பவழச் செவ்வாய் திகழ நாசி பள பளக்க
புன்னகை தவழும் வதனங்கள் மின்ன
கழுத்தில் சங்கிலி புலி நகம் காசுமாலை
கைகளில் கங்கணம் வைர மோதிரங்கள்
இடுப்பிலழகுடன் பட்டாடையணிந்து
எடுப்பாகத் தங்கரணாள் அதற்குள்ளே திகழ
வடிவான காலிரண்டில் தண்டைகொலுசணிந்து
மிடுக்குடன் காட்சி தரும் மாலனைக் கேசவனை
No comments:
Post a Comment