चिन्तल पॆट्ट वलॆना राम
अ. वारण राजुनु ब्रोवनु वेगमे
वच्चिनदि विन्नानुरा राम (क्षी)
च. नारी मणिकि चीर(लि)च्चिनदि नाडे ने विन्नानुरा
धीरुडौ राम दासुनि बन्धमु तीर्चिनदि विन्नानुरा
नीर(जा)क्षिकै नीरधि दाटिन नी कीर्तिनि विन्नानुरा
तारक नाम त्यागराज नुत दयतो(ने)लुकोरा राम (क्षी)
பாலாழிதனிலுறங்கும்….
பல்லவி
பாலாழிதனிலுறங்கும் பரமனே ஶ்ரீராமா
மாலனே கேசவா மனக்கவலை அளித்ததேன்
அனுபல்லவி
நாலாயிரம் பாடல் நாளும் பயில்கின்றேன்
மேலான உன் நாமம் தினமும் துதிக்கின்றேன்
சரணம்
மேலாடை இழந்த காரிகைக்கருள் தந்தவனே
வேல் விழியாள் ஜானகியை விடுவிக்கக் கடல் கடந்த
லீலைகளை நானறிவேன் அழகிய ரகுவனே
சீலமிகு ராமதாசன் துயர் தீர்த்த கதையறிவேன்
காலொன்று முதலை வாயகப்பட்டுக் கதறிய
வேழம்தனை விடுவிக்க விரைந்து வந்ததுமறிவேன்
ஆலிலை துயின்றவனே அயோத்தி மன்னவனே
நாலும் தெரிந்த என் மனக்கவலை தீர்த்தருள்வாய்
No comments:
Post a Comment