காமாம்குரைக நிலயஸ்தவ த்ருஷ்டிபாத:
காமாக்ஷி பக்தமனஸாம் ப்ரததாதி காமான் |
ராகான்வித: ஸ்வயமபி ப்ரகடீகரோதி
வைராக்யமேவ கதமேஷ மஹாமுனீனாம் ||70||
கடாக்ஷ சதகம்
ஹே காமாக்ஷீ! காமத்திற்கு முக்ய இருப்பிடமான உனது கடாக்ஷமானது பக்தர்களுடைய மனங்களுக்கு காமங்களைக் கொடுக்கிறது. ஆயினும், கடாக்ஷமானது ராகத்துடன் (ஆசை,பற்றுதல்) கூடியிருந்த போதிலும், முனிவர்களுக்கு பற்றுதல் இல்லாதிருத்தலை எப்படி உண்டுபண்ணுகிறது?
कामाङ्कुरैकनिलयस्तव दृष्टिपातः
कामाक्षि भक्तमनसां प्रददातु कामान् ।
रागान्वितः स्वयमपि प्रकटीकरोति
वैराग्यमेव कथमेष महामुनीनाम् ॥70॥
மாமறைகள் போற்றும்……
பல்லவி
மாமறைகள் போற்றும் காமாக்ஷி தேவியுன்
நாமமே போற்றித் தாளினைப் பணிந்தேன்
அனுபல்லவி
தாமரை நாபன் கேசவன் சோதரியே
நாமகள் பூமகள் நேசிக்குமீச்வரியே
சரணம்
காமம் நிறைந்த உன் கண்களடியார்க்கு
காமம் தருவதில் வியப்பொன்றுமில்லை
நாமம் துதித்திடும் முனிவர் மனங்களை
நேமமுடன் பற்றின்றி செய்வததிசயமே
No comments:
Post a Comment