சின்னஞ்சிறு கிளியை……
பல்லவி
சின்னஞ்சிறு கிளியைக் கையில் வைத்திருக்கும்
அன்னக்கிளியே ஆண்டாளே எனக்கருள்வாய்
அனுபல்லவி
கன்னங்கரியவன் கேசவனை மணந்திட
முன்னம் மார்கழியில் நோன்பு நூற்றவளே
சரணம்
உன்னைச் சரணடைந்தேன் தாயே
நன்னெறி காக்கும் விட்டு சித்தர் சேயே
பன்னக சயனனரங்கன் மனங்கவர்ந்த
அன்னையே கடல் மகளே கோதாப்பிராட்டியே
No comments:
Post a Comment