अभिनवसिन्दूराभामम्ब त्वां चिन्तयन्ति ये हृदये ।
उपरि निपतन्ति तेषामुत्पलनयनाकटाक्षकल्लोलाः ॥ २०८॥
அபிநவ ஸிந்தூராபாமம்ப த்வாம் சிந்தயந்தி யே ஹ்ருதயே
உபரி நிபதந்தி தேஷாமுத்பல நயனாகடாக்ஷ கல்லோலா ||
எவர்கள் தங்களது ஹ்ருதயத்தில்
புதிதான குங்குமம் போல்
சிவந்த நிறமுள்ள தங்களை
த்யானம் செய்கின்றார்களோ
அந்த பக்தர்களின் பேரில்
ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் கடாக்ஷ
அலைகள் எப்போழுதும் விழுந்து கொண்டிருக்கும்..
- ஶ்ரீ லலிதா ஸ்தோத்ர ரத்நம் .
தேவி சரணம் ! ஸ்ரீ மாத்ரே நமஹ !
எங்கும் நிறைந்திருக்கும்….
பல்லவி
எங்கும் நிறைந்த மகாலக்ஷ்மி தன்
மங்களம் தரும் கடைக்கண்ணருள் தருவாள்
அனுபல்லவி
சங்கும் சக்கரமுமேந்தி நிற்கும் கேசவன்
செங்கண்மாலவனின் திருமார்பிலும் மற்றும்
சரணம்
குங்கும் போலச் சிவந்த நிறமுள்ள
தங்கமெனப் பளபளக்கும் லலிதாம்பிகையுங்கள்
பங்கய பதம்தனை கனிவுடன் அனுதினம்
தங்கள் மனதில் வைத்து துதிப்பவர்க்கு
No comments:
Post a Comment