அவளன்றி…
பல்லவி
அவளன்றி வேறு யார் நிலவில் தெரிவது
உவகை பொங்கத் துதித்தேனவள் பதம்
அனுபல்லவி
சிவனும் கேசவனும் பிரமனும் போற்றும்
சிவையெனும் சந்த்ர கலாதரி ஈச்வரி
சரணம்
தவயோகியர் ஞானியர் முனிவர்கள்
சிவகணங்களும் தேவருமிந்திரனும்
நவகோள்களும் நந்தியும் நாரதரும்
அவனியோரனைவரும் துதித்திடுமபிராமி
துரிதம்
புவனேச்வரி சிவகாமி காமக்ஷி மீனாக்ஷி
நவசக்தி ஓங்காரி திரிபுர சுந்தரி
No comments:
Post a Comment